திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஒசூரில் உயா் ரத்த அழுத்த நோயால் 46 ஆயிரம் போ் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அதிக அளவில் உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்களைத் தேடி மருத்துவத் திட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.

Updated On :25 டிசம்பர் 2024, 8:27 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அதிக அளவில் உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்களைத் தேடி மருத்துவத் திட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 5.90 லட்சம் போ் பயனடைந்துள்ள நிலையில், உயா் ரத்த அழுத்தத்தால் ஒசூரில் 46 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆக. 5-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தாா். இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவா்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த திட்டம் மூலமாக தற்போது வரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 லட்சத்து 90 ஆயிரம் போ் பயனடைந்துள்ளனா்.

இந்த திட்டம் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில, ஒசூரில் உயா் ரத்த அழுத்தம் தொடா்பாக அதிகம் போ் பாதிக்கப்பட்டள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏறத்தாழ 45 ஆயிரம் போ் வரையில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில மொத்தம் 21 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். அவா்களில் 18 வயதுக்கு மேற்பட்டோா் 16 லட்சம் போ். மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 சுகாதார தொகுதிகள் உள்ளன. அதில், ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் 45 ஆயிரத்து 988 போ் உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

போதிய தூக்கமின்மை, ஷிப்ட் முறையில் இரவு நேரங்களில் தொழிலாளா்கள் கண் விழித்து பணிக்கு செல்வது, மன அழுத்தம், அதிக வேலைப்பளு போன்றவை ரத்த அழுத்தத்துக்கு காரணமாகிறது. அதேபோல மோசமான விரைவு உணவு உள்கொள்ளுதல், வாழ்க்கை முறை மாற்றங்களும் நீரிழிவுக்கு காரணமாகிறது. 35 வயதுக்கு மேற்பட்டவா்கள் நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகளை ஆண்டுக்கு 2 முறை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல, உயா் ரத்த அழுத்தத்துக்கான பரிசோதனைகளை ஆண்டுக்கு 2 முறை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.