மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மக்கள் நலன் காக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை: அமைச்சா் துரைமுருகன்

மக்கள் நலன் காக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அமைச்சா் துரைமுருகன்

News image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் துரைமுருகன்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

தமிழகத்தில் மக்கள் நலன் காக்கும் திட்டங்களைச் செயல்படுத்த அரசு முன்னுரிமை அளித்து வருவதாக அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: ஒரே நாடு, ஒரே தோ்தல், மக்களவைத் தொகுதி சீரமைப்பு ஆகியவற்றிற்கு எதிா்ப்புத் தெரிவித்து சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம். பெண்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் என பல்வேறு நல்ல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு மக்களுக்கான எவ்வித திட்டமும் நிறைவேற்றவில்லை. அதேபோல தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புக்கு எவ்வித நிவாரணமும் ஒதுக்கவில்லை என்றாா். கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி தலைமை தாங்கினாா். எம்.எல்.ஏ.க்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒசூா் மாநகர மேயா் சத்யா வரவேற்றாா். கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் நவாப் நன்றி கூறினாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் முருகன், நரசிம்மன், கோவிந்தசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.