மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரியில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்

கிருஷ்ணகிரியில் இருந்து அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது.

News image
கிருஷ்ணகிரியில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்
Updated On :9 ஜனவரி 2024, 3:02 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருந்து அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், இன்றுமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் யாரும் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆந்திரம்,  கர்நாடகம் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  கிருஷ்ணகிரி புறநகரப் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு, ஓசூர், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், குப்பம், சென்னை, சேலம், அரூர், திருச்சி, கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதுபோல,  கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

Story image

தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.