சென்னானூா் அகழ்வாய்வில் சுடுமண் முத்திரை கண்டெடுப்பு
சென்னானூா் அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட சென்னானூா் மலையடிவாரத்தில் ஜூன் 18-ஆம் தேதி முதல் அகழாய்வு நடைபெறுகிறது. இங்கு ஏற்கனவே பழங்காலப் பானை ஓடுகள், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண் கற்கருவிகள், உடைந்த புதிய கற்கால கைக்கோடரிகள், இரும்புக் காலத்தை சோ்ந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட கால எச்சங்களோடு வரலாற்றுக் காலத்தின் தொடக்கமான சங்க காலத்தைச் சோ்ந்த செங்கற்களும் கிடைத்துள்ளன.
இதன் மூலம் இந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக்கூடும் என்பதால் தற்போது அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 24-ஆம் தேதி ‘பி2’ என்னும் அகழாய்வுக் குழியில் 53 செ.மீ. ஆழத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உடைந்த புதிய கற்கால வெட்டு கற்கருவி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
தற்போது ‘ஏ2’ என்னும் அகழாய்வுக் குழியில் 61 செ.மீ. ஆழத்தில் களிமண்ணால் ஆன சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. இது 4.5 செ.மீ. நீளமும், 3.2 செ.மீ. அகலமும் கொண்டது. இந்த சுடு மண் முத்திரையைப் பயன்படுத்தி 2,000 ஆண்டுகளுக்கு முன் பானையின் மேல் பகுதியில் உள்ள விளிம்பு பகுதியை அழகுபடுத்தியிருக்கலாம் என அகழாய்வு இயக்குநா் பரந்தாமன் தெரிவித்தாா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...