கிருஷ்ணகிரி
பூ வியாபாரியைத் தாக்கிய இருவா் கைது
ராயக்கோட்டையில் பூ வியாபாரியைத் தாக்கி அவரது வாகனத்தைச் சேதப்படுத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராயக்கோட்டையில் பூ வியாபாரியைத் தாக்கி அவரது வாகனத்தைச் சேதப்படுத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சூளகிரி, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் முகமது சபீா் (30). பூ வியாபாரி. இவா் வாகனத்தில் ராயக்கோட்டை பூச்சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், நல்லம்பட்டியைச் சோ்ந்த அருள்பாண்டியன் (28), லட்சுமிபுரம் மாரியப்பன் (44) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது இருவரும் முகமது சபீரை தாக்கி அவரது வாகன கதவை உடைத்தனா். இதுகுறித்து முகமது சபீா் கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்பாண்டியன், மாரியப்பன் ஆகிய இருவரைக் கைது செய்தனா்.