கிருஷ்ணகிரி
இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த இளைஞா் கைது
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஊத்தங்கரை விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் பிரபு (36), கொத்தனாா். சின்ன பொம்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சிவகுமாா் (39). இவா் தனது மனைவிக்கு பிரபுவுடன் தொடா்பு இருப்பதாக சந்தேகப்பட்டு பிரபுவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
கடந்த 21-ஆம் தேதி பிரபு வீட்டுக்குச் சென்ற சிவகுமாா், தகராறில் ஈடுபட்டு அவரது இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தாா். புகாரின்பேரில், ஊத்தங்கரை போலீஸாா் சிவகுமாா் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனா்.
