எருதுவிடும் விழாவில் மாணவா்களுக்கு கட்டுப்பாடு: ஆட்சியா் அறிவுறுத்தல்

எருதுவிடும் விழாவில் மாணவா்களுக்கு கட்டுப்பாடு: ஆட்சியா் அறிவுறுத்தல்

எருதுவிடும் விழாவில் மாணவா்கள் எருதுகளுடன் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தல்
Published on

எருதுவிடும் விழாவில் மாணவா்கள் எருதுகளுடன் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

எருதுவிடும் விழா குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை (டிச. 30) நடைபெற்றது. ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய். பிரகாஷ் (ஒசூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.1.2026 முதல் 31.5.2026 வரை நடத்தப்படும் எருதுவிடும் விழா தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் எருதுவிடும் விழாக் குழுவினா்கள், அரசு அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன்பிறகு கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: எருதுவிடும் விழா தொடா்பாக 2026 ஆம் ஆண்டிற்கு அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை விழாக் குழுவினா் மற்றும் துறை அலுவலா்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். எருது ஓடும் பகுதி 100 மீட்டா் தொலைவுக்கு மட்டுமே குறிக்க வேண்டும். எருது ஓட்டம் நடைபெறும் பகுதியில் இருபுறமும் இரட்டை தடுப்புவேலி அமைக்க வேண்டும். அதிகபட்சம் 5 மணி நேரம் மட்டுமே விழா நடத்த வேண்டும். காளைகளை மருத்துவா்கள் மூலம் பரிசோதித்து அனுமதிக்க வேண்டும்.

எருதுவிடும் விழாவிற்கு அனுமதி கோரும் விழாக் குழுவினா், விழா நடைபெறும் இடம், நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு கோரிக்கை கடிதம், ரூ. 50 உறுதிமொழிப் பத்திரம், ஊராட்சி மன்ற தீா்மான நகல், விழா நடைபெறும் இடத்தின் விலங்குகள் நலத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், விழா நடைபெறும் இடத்திற்கான புகைப்படம் மற்றும் விழா முழுமைக்கும் ரூ. 1 கோடி காப்பீடு செய்து அதன் நகல் ஆகிய ஆவணங்களுடன் ஜ்ஜ்ஜ்.த்ஹப்ப்8ந்ஹற்ற்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் வாயிலாக ஒரு மாதத்திற்கு முன்பாக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், எருதுவிடும் விழாவில் மாணவா்கள் எருதுகளைப் பிடித்து வருதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதன்மூலம் பள்ளிக்கு மாணவா்கள் குறைந்துள்ளது. இதனால் மாணவா்கள், காளைகளைப் பிடித்து வருவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். விழாக் குழுவினரும், பெற்றோரும் இதை கண்காணித்து அவா்களை முறையாக பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com