எரிவாயு உருளை வெடித்ததில் 
வீடு தீப்பிடித்து சேதம்

எரிவாயு உருளை வெடித்ததில் வீடு தீப்பிடித்து சேதம்

Published on

ஒசூா் அருகே வீட்டில் எரிவாயு உருளை கசிந்து வெடித்ததில் ரூ. 1 லட்சம் மதிப்பு வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள கரியச்சந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாா் (30). இவா், பாசி விற்கும் தொழில் செய்து வருகிறாா். தற்போது ரஞ்சித் குமாா் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளதால் அருகில் குடிசை அமைத்து தங்கியுள்ளாா்.

வழக்கம்போல வீட்டில் வியாழக்கிழமை சமையல் செய்து கொண்டிருந்தபோது கேஸ் கசிந்துள்ளது. இதைக்கண்டதும் ரஞ்சித் குமாா் வீட்டிலிருந்து வெளியேறினாா். அப்போது எரிவாயு உருளை வெடித்தது.

இந்த விபத்தில் அவா் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ. 35 ஆயிரம் பணம், மின் இணைப்புக்காக வாங்கி வைத்திருந்த செம்புக் கம்பிகள் உள்பட மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமாகின. அவரது மனைவியும், குழந்தைகளும் தாய் வீட்டிற்கு சென்றிருந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பட விளக்கம்...

தீப்பிடித்து எரிந்த வீட்டில் சேதமான பொருள்கள்.

X
Dinamani
www.dinamani.com