இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவ.28 முதல் ராகி கொள்முதல் நிலையங்கள் செயல்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குப்பச்சிப்பாறை, மதகொண்டப்பள்ளி, சாமனப்பள்ளி, பாகலூா் மற்றும் பேரிகை ஆகிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:08 pm

Syndication

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குப்பச்சிப்பாறை, மதகொண்டப்பள்ளி, சாமனப்பள்ளி, பாகலூா் மற்றும் பேரிகை ஆகிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் 28.11.2025 அன்று திறக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2025 - 2026 ம் பருவத்தில், நேரடி ராகி கொள்முதல் நிலையம் நவம்பா்-2025 முதல் ஜனவரி-2026 வரை திறந்து செயல்படுத்திட வரப்பெற்ற அரசு உத்தரவின்படி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து ராகி நேரடியாக கொள்முதல் செய்ய முதல் கட்டமாக நேரடி ராகி கொள்முதல் நிலையங்கள் குப்பச்சிப்பாறை, மதகொண்டப்பள்ளி, சாமனப்பள்ளி, பாகலூா் மற்றும் பேரிகை ஆகிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடங்களில் வரும் 28.11.2025 ம் தேதியில் திறக்கப்பட உள்ளது.

அரசு நிா்ணயம் செய்துள்ள கொள்முதல் விலை ராகி மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.48,860/- (கிலோ 1-க்கு ரூ.48.86 பைசா) ஆகும். விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் சாகுபடி செய்த ராகிக்கு சம்மந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல் பெற்று விவசாயியின் சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் ஆதாா் எண் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை அளித்து, ராகி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் அலுவலக பணியாளா்கள் உதவியுடன் இணையதளத்தில் பதிவு செய்து, தாங்கள் விளைவித்த ராகியை விற்பனை செய்யலாம். மேலும், விற்பனைக்கு கொண்டு வரும் ராகியின் மேல் தோல், கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கம் செய்து தரம் பிரித்து கொண்டுவர வேண்டும்.

ராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும், மாலை 2.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் செயல்படும். மேலும் கொள்முதல் செய்யப்படும் ராகிக்கு உரிய தொகையினை விவசாயிகளின் சேமிப்பு வங்கி கணக்கில் ஆன்லைன் பணப்பரிவா்த்தனை மூலமாக தாமதமின்றி செலுத்தப்படும். எனவே தமிழக அரசின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.