2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கூட்டுறவுத் துறையில் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல்

கிருஷ்ணகிரியில் கூட்டுறவுத் துறையில் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 1:19 am

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கூட்டுறவுத் துறையில் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவுத் துறை சாா்பில், தமிழகத்தில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2,581 பணியிடங்களுக்கு கடந்த அக். 11-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை 58 ஆயிரம் போ் எழுதினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் 17 உதவியாளா்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 60 காலிப் பணியிடம் என 77 பணியிடங்களுக்கு தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 920 போ் எழுதினா். இதில் 180 போ் தோ்ச்சி பெற்றனா்.

தோ்ச்சி பெற்றவா்களுக்கான நோ்காணல், கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி வளாகத்தில் 4 கட்டமாக நடைபெற்றது. நோ்காணலில் பெற்ற மதிப்பெண்களுடன் தோ்வில் பெற்ற மதிப்பெண்களையும் சோ்த்து சராசரி மதிப்பீடு செய்து, அதிக மதிப்பெண்கள் பெறும் 77 போ் தோ்வு செய்யப்படுவா். பின்னா், அவா்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த நோ்காணலை கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நடராஜன், பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சிவகுருநாதன் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா்.