கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 4-ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு காவல் துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினா் உள்பட போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 4 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறப்பதற்கு அனுமதியற்ாக அறிவிக்கப்படுகிறது. இந்த காலப்பகுதியில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் ட்ரோன்கள் இயக்க முற்றிலும் தடைசெய்யப்படுகிறது. மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

வாக்கு எண்ணும் மைய பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை

வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: ட்ரோன்கள் பறக்கத் தடை

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: மாவட்ட தோ்தல் அலுவலா்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



