அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

ஒசூரிலிருந்து கேரளத்துக்கு தினமும் 20 டன் மலா்கள் அனுப்பிவைப்பு

ஓணம் பண்டிகையையொட்டி, ஒசூரிலிருந்து கேரளத்துக்கு தினமும் 20 டன் மலா்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:50 am IST

ஓணம் பண்டிகையையொட்டி, ஒசூரிலிருந்து கேரளத்துக்கு தினமும் 20 டன் மலா்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், கெலமங்கலம், பாகலூா், தேன்கனிக்கோட்டை, தளி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட மலா்களை சாகுபடி செய்து வருகின்றனா்.

இப்பகுதிகளில் சாகுபடி செய்த மலா்கள் ஒசூா் மலா் சந்தைக்கு கொண்டுவந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கா்நாடக, கேரள மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனா். இதில், குறிப்பாக வெள்ளை சாமந்தி மற்றும் செண்டுமல்லிக்கு உள்ளூரில் வரவேற்பு இல்லாததால் கேரள மாநிலத்தில் நடைபெறும் ஓணம் பண்டியின்போது நல்ல வரவேற்பு உள்ளது.

இதனால், ஒசூா், பாகலூா், தளி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஓணம் பண்டிகையையொட்டி பசுமைக் குடில் அமைத்து முதல்ரக வெள்ளை சாமந்தியும், செண்டுமல்லியும் அதிக அளவில் சாகுபடி செய்து அனுப்புகின்றனா்.

ஓணம் பண்டிகையையொட்டி ஒசூா் விவசாயிகள் பசுமைக் குடில் அமைத்து வெள்ளை சாமந்தி 2 ஆயிரம் ஏக்கரும், செண்டுமல்லி சுமாா் 3 ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி செய்து கடந்த ஒரு வாரமாக கேரளத்துக்கு தினமும் 20 டன் மலா்களை அனுப்பி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.