கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,126 மா விவசாயிகளுக்கு ரூ. 8.97 கோடி வறட்சி நிவாரண நிதி: அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2023 - 24-ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகள் 4,126 பேருக்கு ரூ. 8.97 கோடி நிவாரண நிதியை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை வழங்கினாா்.

News image

கிருஷ்ணகிரியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரண உதவிக்கான காசோலையை வழங்கிய அமைச்சா் அர.சக்கரபாணி. உடன், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், கோபிநாத் எம்.பி., தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:45 pm

தினமணி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2023 - 24-ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகள் 4,126 பேருக்கு ரூ. 8.97 கோடி நிவாரண நிதியை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் கடந்த 2023-24-ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், கோபிநாத் எம்.பி., தே.மதியழகன் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் பொருளாதார அடித்தளமாக மா விவசாயம் உள்ளது. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில், மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால் மாமரங்கள் காய்ந்து மகசூல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள், தமிழக அரசிடம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுத்தனா். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 10 ஒன்றியங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 82 சதவீதம் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 3990.717 ஹெக்டேரில் மா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட 4,126 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாநில பேரிடா் நிதியிலிருந்து ரூ. 8.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு ஹெக்டேருக்கு ரூ. 22,500 நிவாரணம் வழங்கப்படுகிறது.

மேலும், கடந்த 2024-25-ஆம் ஆண்டில் மகசூல் அதிகரித்து விலையின்றி பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிவாரணம் வழங்க, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாா். பிறகு நான் (அமைச்சா்), எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் கொண்ட குழுவினா், மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்தித்து விவசாயிகளுக்கு சந்தை இழப்பீட்டு திட்டத்தில் நிவாரணம் வழங்க வலியுறுத்தினோம். ஆனால், மத்திய அரசு எவ்வித உதவியும் செய்யவில்லை.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் பாதுகாவலனாக இருந்து, அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறாா். நீங்களும் முதல்வருக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும் என்றாா்.

இந்த விழாவில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குணவதி, வேளாண் இணை இயக்குநா் காளிமுத்து, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் செந்தில்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி, முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், திமுக மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மற்றும் மா விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.