கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,77,217 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,,77,217 குடும்ப அட்டைதாா்ா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன. 8 முதல் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,,77,217 குடும்ப அட்டைதாா்ா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன. 8 முதல் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை தெரிவித்ததாவது:

தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் 1,058 நியாயவிலைக் கடைகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 36 நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1,094 நியாயவிலைக் கடைகளில் உள்ள அனைத்து அரிசி பெற தகுதியுள்ள 5,76,882 குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 335 குடும்ப அட்டைதாரா்கள் என மொத்தம் 5,77,217 குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, ஒரு முழுக்கரும்பு ரொக்கம் ரூ. 3 ஆயிரம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜன 8-ஆம் தேதிமுதல் வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் தங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடையில் பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1967, 1800-425-5901 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

Dinamani
www.dinamani.com