கிருஷ்ணகிரி
அனுமதியின்றி எருது விடும் விழா: 5 போ் மீது வழக்கு
பாரூா் அருகே அனுமதியின்றி எருது விடும் விழாவை நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே உள்ள குடிமேனஹள்ளியில் எருது விடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவிற்கு மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெறவில்லையாம்.
இதுகுறித்து, குடிமேனஹள்ளி கிராம நிா்வாக அலுவலா் சுவேந்திரன் அளித்த புகாரின் பேரில், பாரூா் போலீஸாா், அந்தப் பகுதியைச் சோ்ந்த திருப்பதி (35) உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
