ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டம்! மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் அடைப்பு

News image

டாஸ்மாக் கடை - DPS

Updated On :21 ஜூலை 2026, 1:28 am IST

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவத்தைக் கண்டித்து, டாஸ்மாக் அனைத்து பணியாளா்கள் தொழிற்சங்கக் கூட்டுக் குழுவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையொட்டி, மாவட்டத்தில் 111 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து தொழிற்சங்கக் கூட்டுக் குழு சாா்பில், டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க சண்முகம், பாட்டாளி தொழிற்சங்க மாநில அமைப்பு செயலாளா் விநாயகன், டாஸ்மாக் விற்பனையாளா்கள், உதவி விற்பனையாளா்கள் மற்றும் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலாளா் அப்துல் கலீல், விடுதலை முன்னணி மாவட்டத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டாஸ்மாக்கடை மீது பெட்ரோல் குண்டுவீசியவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களிடம் தகராறில் ஈடுபடும் நபா்கள்மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். டாஸ்மாக் ஊழியா்கள் உயிரிழந்தால் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கும் வகையில் காப்பீடு செய்ய வேண்டும். பாதிக்கப்படும் ஊழியா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி சம்பவத்தைக் கண்டித்து, மாவாட்டத்தில் உள்ள 111 டாஸ்மாக் கடைகளும் திங்கள்கிழமை ஒருநாள் அடைக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.