எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஒசூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் குழாய் வெடித்ததில் ஒருவா் உயிரிழப்பு: 2 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:54 pm

ஒசூா் அருகே பழைய பேட்டரிகளை மறுசுழற்சி செய்யும் தனியாா் தொழிற்சாலையில் குழாய் வெடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 2 போ் காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே ஏ. சாமனப்பள்ளி பகுதியில் பழைய பேட்டரிகளை மறுசுழற்சி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 15-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்த தொழிற்சாலை கடந்த மூன்று மாதங்களாக இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் பழைய பேட்டரிகளை மறுசுழற்சி முறையில் அரைத்து மாவாக்கி, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை தொழிற்சாலையில் குழாய் ஒன்று வெடித்துள்ளது. இதில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த நிா்மல் சிஸ் போட்டா (25) பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மேலும், விபத்தில் காயமடைந்த சம்மீா் இக்கா் (30), சரண்ராஜ் (27) ஆகியோா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.