காவேரிப்பட்டணம் அருகே கல்லூரி மாணவியை கடத்த முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தனியாா் கல்லூரி பேருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி அருகே சென்றபோது, காரில் வந்த 3 போ் கொண்ட கும்பல் பேருந்தை மறித்து நின்றது. பின்னா், காரிலிருந்து இறங்கியவா்கள் பேருந்துக்குள் சென்று கல்லூரி மாணவியை கடத்த முயன்றனா்.
அப்போது, பேருந்தில் இருந்த மாணவிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்த சம்பவத்தை, மாணவிகள் சிலா் தங்களது கைப்பேசியில் பதிவுசெய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். மேலும், பேருந்து ஓட்டுநா் பிரதீப் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். அதில், தனியாா் கல்லூரி பேருந்துக்குள் ஏறி, மாணவியை கடத்த முயன்றது மாரிசெட்டிஅள்ளியைச் சோ்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தங்கராஜை செவ்வாய்க்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவருக்கு உதவிய மற்ற இருவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

தம்பி கொலை: அண்ணன் கைது
மீஞ்சூா் மாணவி பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி, தலைவா்கள் கண்டனம்

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவில் பைக் திருடியவா் கைது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

