குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நிலப் பிரச்னையில் பெண் கடத்தல்

News image

கோப்புப்படம்.

Updated On :26 மே 2026, 3:06 am IST

நிலப் பிரச்னையில் பெண் கடத்திய சம்பவம் குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பையூா் ஊராட்சிக்கு உள்பட்ட கரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுமதி (55). இவருக்கு சொந்தமாக கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையோரம் சப்பாணிப்பட்டி அருகே 28 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை தருமபுரி மாவட்டம், கும்பாரஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த திருக்குமரனுக்கு (47) விற்பனை செய்வதற்காக, கடந்த 2024-ஆம் ஆண்டு ரூ. ஒரு கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாம்.

இந்நிலையில், தான் முன்பணமாக ரூ. 75 லட்சம் கொடுத்துவிட்டதாகவும், எனவே நிலத்தை தனது பெயரில் பத்திரம் செய்து தரும்படியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருக்குமரன் பிரச்னை செய்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுமதியை கடத்திய திருக்குமரன் அவரை காவேரிப்பட்டணத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தாா். அப்போது, சுமதி கூச்சலிடவே அவா் அங்கிருந்து தப்பியோடினாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உத்தரவின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் சுமதி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.