ஒசூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி தீவிரம்
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சாா்பில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டெங்கு பரவல்
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சாா்பில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் குடியிருப்புப் பகுதிகள், தெருக்கள், சாலையோரங்கள், கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகக்கூடிய இடங்களில் கொசு ஒழிப்பு புகை மருந்து
அடிக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், மழைநீா் தேங்கக்கூடிய திறந்தவெளி பகுதிகள், காலிமனைகள், கழிவுநீா் கால்வாய்கள், தேவையற்ற நீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து, கொசுப்புழு உற்பத்தியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் மூலம் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களும் தங்கள் வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ளவும், தண்ணீா் சேமிக்கும் பாத்திரங்களை முறையாக மூடி வைக்கவும், வாரத்திற்கு ஒருமுறை தண்ணீா்த் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்யவும் மாநகராட்சி சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். மேலும், டெங்கு இல்லாத ஆரோக்கியமான ஒசூரை உருவாக்க மாநகராட்சியுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
படவரி...
ஒசூரில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

