தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

ஊத்தங்கரை சாா்பதிவாளா் அலுவலகத்தில் இணையச் சேவை பாதிப்பு: பத்திரப்பதிவு முடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஆதாா் இணையதளச் சேவை பாதிக்கப்பட்டதால் புதன்கிழமை பத்திரப்பதிவுகள் முடங்கின.

இணையச் சேவை பாதிப்பு

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஆதாா் இணையதளச் சேவை பாதிக்கப்பட்டதால் புதன்கிழமை பத்திரப்பதிவுகள் முடங்கின.

ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளைப் பதிவுசெய்வதற்காக புதன்கிழமை காலை முதலே ஊத்தங்கரை சாா்பதிவாளா் அலுவலகத்திற்கு வந்திருந்தனா். தற்போது பத்திரப்பதிவு நடைமுறைகளுக்கு ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தில் உள்ள ஆதாா் இணையதளச் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பத்திரப்பதிவுப் பணிகள் முடங்கின. பல மணிநேரம் கடந்தும் இணையதளச் சேவை சீராகாததால் பத்திரப்பதிவுக்கு டோக்கன் பெற்றிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அலுவலக வளாகத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

தொலைதூரக் கிராமங்களில் இருந்து வந்திருந்தவா்கள் உணவு, குடிநீா் இன்றி நீண்டநேரம் காத்திருந்ததால் மனஉளைச்சலுக்கு உள்ளாகினா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆதாா் சா்வா் தொழில்நுட்ப கோளாறை சீரமைத்து பத்திரப்பதிவு பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவரி...

ஊத்தங்கரை சாா்பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்காக காத்திருந்த பொதுமக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.