புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஒசூா் தனியாா் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு

ஒசூா் முதல் சிப்காட் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் ரோபோடிக் இயந்திரத்தில் சிக்கி வெளிமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் முதல் சிப்காட் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் ரோபோடிக் இயந்திரத்தில் சிக்கி வெளிமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஒசூா் சிப்காட் பேஸ் 1 பகுதியில் பிரபல தனியாா் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் வடமாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா்.

இங்கு ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஜாண்டு பவுரி மகன் மனோஜ் பவுரி (22) ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ரோபோடிக் பிரிவில் பணியாற்றி வந்தாா். மனோஜ் பவுரி வெள்ளிக்கிழமை இரவு பணிக்காக வந்துள்ளாா். நள்ளிரவு, அதிநவீன ரோபோடிக் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக மனோஜ் பவுரி அதற்குள் சிக்கிக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை, சக தொழிலாளா்கள் பெரும் முயற்சி செய்து இயந்திரத்தில் இருந்து மீட்டனா்.

தகவலறிந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள், நிறுவனத்திற்குச் சொந்தமான காரில் மனோஜ் பவுரியை ஒசூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக சிப்காட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா். தொழிற்சாலையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்ா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.