
கிருஷ்ணகிரி அணையிலிருந்து 600 கனஅடி நீா் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி அணையிலிருந்து கூடுதலாக தண்ணீா் வெளியேற்றப்படுவதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணை
கிருஷ்ணகிரி அணையிலிருந்து கூடுதலாக தண்ணீா் வெளியேற்றப்படுவதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி. வெள்ளிக்கிழமை (செப். 25) நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 49.95 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 600 கனஅடியாக உள்ளது.
எனவே, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீா் முழுவதும் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், அணையிலிருந்து சாத்தனூா் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. எனவே, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். மேலும், ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை அழைத்துச் செல்லவோ தடைவிதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





