விரைவு மின் இணைப்பு திட்டம்: பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

தாட்கோ மூலம் பழங்குடியின விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் விரைவு மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தாட்கோ மூலம் பழங்குடியின விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் விரைவு மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: தாட்கோ மூலம் பழங்குடியின விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்பும் பழங்குடியின விவசாயிகள் சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
 இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், பாஸ்ட்.தாட்கோ.காம் (ச்ஹள்ற்.ற்ஹட்க்ஸ்ரீர்.ஸ்ரீர்ம்) என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது தேவையான சான்றுகளை இணைக்க வேண்டும்.
 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைபடுபவர்களின் வசதிக்காக, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தகுதி வாய்ந்த பழங்குடியின விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com