ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

இலவச கண் சிகிச்சை முகாம்

சாயி கிருபா அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும்  கரூர் ரஜினிகாந்த் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

Updated On :5 ஏப்ரல் 2018, 7:11 am IST

சாயி கிருபா அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும்  கரூர் ரஜினிகாந்த் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 8) சாயி மந்திரில் நடைபெற உள்ளது.
இம் முகாமானது காலை 7 மணிக்கு தொடங்கி  மதியம் 1 மணி வரை நடைபெறும். இம் முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப் படுவர்களை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இலவசமாக  அழைத்துச் செல்லப்படுவர்.
ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனையானது முகாம் நடைபெற்ற திருச்செங்கோடு சாயி மந்திரில் இலவசமாக செய்யப்படும். மேலும், எலும்பு, மூட்டு தேய்மான பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனைகள், ரத்த வகை கண்டறிதல், ஈசிஜி போன்றவை இம் முகாமில் இலவசமாக நடத்தப்படும். மேலும், ஒவ்வொரு மாதமும் பிரதி வாரம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை திருச்செங்கோடு சாயி மந்திரில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு  ஸ்ரீ சாயி கிருபா அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.