பரமத்தி வட்டார வளமையம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் உதவி திட்ட அலுவலர் சரவணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி ஒன்றியத்தில் உள்ள குடியிருப்புகளிலும் 6 முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை குடியிருப்பு வாரியாக கண்டறியும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கியது. இக் கணக்கெடுப்புப் பணியை பரமத்தி வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அருள்புனிதன் தொடக்கி வைத்தார்.
பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியப்பட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பரமத்தி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) தமிழ்ச்செல்வி, ஆசிரிய பயிற்றுநர்கள் புவனேஸ்வரி,பஞ்சவர்ணம்,நிர்மலாதேவி,அனிதாகுமாரி, குமுதா மற்றும் சிறப்பாசிரியர்கள் முரளிதரன், பெரியசாமி ஆகியோர் கணக்கெடுக்கும் பணி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்பிரிக்காவில் ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி கொலை: டிரம்ப்

ரூ.100 கோடி ஆன்லைன் கல்வி நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 16) குறைவு! இன்றைய நிலவரம்!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
