லாரி மோதியதில் முதியவர் சாவு
பரமத்திவேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையம் அருகே லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.


பரமத்திவேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையம் அருகே லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
நல்லூர் கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் குருமணகவுண்டர் (81). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். வேலூர்-திருச்செங்கோடு சாலையைக் கடக்க முயன்றபோது லாரி மோதி படுகாயமடைந்தார்.
அவர், தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குருமணகவுண்டர் உயிரிழந்தார். நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...