இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை குறித்த விழிப்புணர்வு பேரணி நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது.
அனைத்து தபால் நிலையங்களிலும் வங்கி பரிவர்த்தனை வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வரும் 21ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு பேரணி நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பி.முருகேசன் தலைமை வகித்தார். துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய சாலை வழியாகச் சென்றது. பேரணியின்போது இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை சிறப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நாமக்கல் கோட்டத்தில் முதல் கட்டமாக பரமத்தி வேலூர், கணேசபுரம் துணை அஞ்சலகம், சந்நியாசி கரடு, வசந்தபுரம் மற்றும் நஞ்சை இடையார் கிளை அஞ்சலகங்களிலும் இத் திட்டம் தொடங்கப்படவுள்ளது என அஞ்சல அதிகாரிகள் தெரிவித்தனர். பேரணியில் அஞ்சல் துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளுக்காக அரசு வேலையை கைவிட்ட உனாட்டி ஹூடாவின் தந்தை..! பயிற்சியாளராகவும் பங்களிப்பு!

அரசுப் பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பில் புதிய சலுகை!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 18 - நேரலை!

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


