/

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம்: நாஞ்சில் சம்பத் பேட்டி

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

Updated On :31 டிசம்பர் 2018, 10:18 am IST

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அளித்த பேட்டி:
நாட்டில் பண மதிப்பிழப்பு  நடவடிக்கையால் 120 பேர் உயிரிழந்தனர். ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்தியாவில் தொழில் துறை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பசுவுக்காக மனிதனை பலியிடும் அநியாயம் நடக்கிறது.
தமிழகம் எல்லா துறைகளிலும் வஞ்சிக்கப்படுகிறது. ஒக்கி புயல், கஜா புயலுக்கு உரிய நிவாரணம் இன்னும் வந்து சேரவில்லை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
அதிகாரத்தில் இருப்பவர்களை அகற்றுவதற்கு மக்கள் தயாராக உள்ளதைத்தான், மூன்று மாநில தேர்தல்கள் முடிவுகள் முன்மொழிந்திருக்கின்றன. 3-ஆவது அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இந்திய அரசியலில் இல்லை.
 கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரத்தால், தமிழக அரசு மருத்துவமனைகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் செயலுக்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.
ஒரு கட்சியில் இணைந்துதான் கடமையாற்ற வேண்டும் என்று கருதவில்லை. தமிழகத்தில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளது. அதிமுகவை இணைக்கும் பெரிய பணியை மோடி செய்து கொண்டிருக்கிறார் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.