அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆசிரியர்களின் ஊதியத்தை மாத இறுதியில் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பரமத்தி வேலூர் அருகே கபிலர்மலை ஒன்றியத்தில் பணியாற்றி வரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு சரிவர

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:50 am

DIN

பரமத்தி வேலூர் அருகே கபிலர்மலை ஒன்றியத்தில் பணியாற்றி வரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு சரிவர சம்பளத்தொகை வழங்கப்படாதது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கபிலர்மலை ஒன்றியத்தில் இயங்கி வரும் 58 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 197 ஆசிரிய,ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். வழக்கமாக மாத சம்பளம் மாதத்தின் இறுதி நாளில் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், ஜனவரி மாதத்திற்கான சம்பளம் இதுவரை  வழங்கப்படாமலே உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பளத் தொகையை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த ஒன்றியத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாதத்தின் இறுதி நாளில் மாத சம்பளம் கிடைக்கப்பெறுவதை உத்திரவாதப்படுத்திட வேண்டுமெனவும், தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கபிலர்மலை உதவித்தொடக்கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது. வழக்கமாக மாத கடைசியில் மாத ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கி வருகிறோம். ஆனால் தொடர் விடுமுறை காரணமாக ஜனவரி மாத ஊதியத்தை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் திங்கட்கிழமை வழக்கம் போல் ஜனவரி மாத ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மாநில பாடத் திட்டத்தில் நீட் தேர்வு:
புரட்சி பாரதம் கட்சி கோரிக்கை
நாமக்கல், பிப். 4:   மாநில பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் நாமக்கல் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை. இளம்வழுதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வரும் 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கட்சியின் 40-ஆவது ஆண்டு துவக்க விழாவில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பது. ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அளிப்பது,  நாமக்கல் நகரில் அம்பேத்கர் சிலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும். நீட் தேர்வை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நடத்தாமல் மாநில பாடத்திட்டத்தில் நடத்த வேண்டுவது, பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாக திரும்பபெற வேண்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் எம்.முத்துக்குமார், இளைஞரணித் தலைவர் ஹரிராமகிருஷ்ணன், மாவட்டத் துணைச் செயலர் சிங்காரவேல், மாணவரணித் தலைவர் சக்ரவர்த்தி, நகரத் தலைவர் சக்தி, செயலர் ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.