நாமக்கல் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
Updated on
1 min read

நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் நகர, ஒன்றிய கிளை மாநாடு நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது. கட்சி நிர்வாகி கே.ஜீவாதாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.மணிவேல், பொருளாளர் ஆர்.குழந்தான் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், கிராமப் புறங்களில் பல ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியைப் பெற்று இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
நாமக்கல்-கரூர் வழித்தடத்தில் கூடுதல் ரயில் இயக்க வேண்டும். நாமக்கல் நகரின் சுற்றுச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நாமக்கல் நகரம் லாரி தொழில் கேந்திரமாக இருப்பதால், லாரி தொழிற்பேட்டையை நாமக்கல்லில் அமைக்க வேண்டும்.   நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். நாமக்கல் நகராட்சியுடன் வகுரம்பட்டி ஊராட்சியை இணைக்க வேண்டும்.
முன்னதாக, கட்சியின் நாமக்கல் நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நகர செயலராக ந.தம்பிராஜா, துணைச் செயலராக கே.சுந்தரேசன், பொருளாளராக சே. ஜீவதாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com