பரமத்தி வேலூரில் வாய்க்கால் பாசன விவசாயிகள்-பொதுப்பணித் துறையினர் கலந்தாய்வு
பரமத்தி வேலூரில் ராஜா, குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்கால்களின் பாசன விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்


பரமத்தி வேலூரில் ராஜா, குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்கால்களின் பாசன விவசாயிகள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூரில் நடைபெற்ற வாய்க்கால் பாசன விவசாயிகள் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடான கலந்தாய்வுக் கூட்டம் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, பொதுப்பணித் துறை சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் கெளதமன், உதவி செயற்பொறியாளர் முரளி, பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ராஜா, குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்கால்களின் பாசன விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியது:
வாய்க்கால்களின் பராமரிப்புக்காக தண்ணீர் நிறுத்தப்படுவது ஒருமாத காலம் தள்ளி வைக்க வேண்டும். பரமத்தி வேலூர் விவசாயத்தை மையமாக கொண்ட பகுதியாக உள்ளது. இங்குள்ள விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக விளங்குவது ராஜா, பொய்யேரி, குமாராபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால்களாகும். இந்த வாய்க்கால்கள் மூலம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்று வருகிறது.
கடந்தாண்டு ஏற்பட்ட கடும் வறட்சியாலும், காவிரியில் தண்ணீர் இல்லாமல் போனதாலும் போதிய தண்ணீர் வாய்க்கால்களுக்கு திறந்து விடப்படாததால், வாய்க்கால் பாசனத்தை நம்பி இருந்த வெற்றிலை, கரும்பு, வாழை, கோரை, நெல் மற்றும் மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் செய்திருந்த விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 6 மாதங்களாக தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மீண்டும் புத்துயிர் பெற்று பயிர் செய்துள்ளனர். ஆண்டுதோறும் மார்ச் முதல் தேதியில் இருந்து 15-ஆம் தேதி வரை தண்ணீர் நிறுத்தப்பட்டு வாய்க்கால் தூர்வாரப்படுவது வழக்கம். தற்போது பயிர் செய்துள்ள பயிர்கள் வளரும் பருவத்தில் உள்ளதால், பராமரிப்புக்காக வாய்க்கால்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் பயிர்கள் கருகும் நிலை ஏற்படும்.
எனவே, பராமரிப்புக்காக தண்ணீர் நிறுத்தப்படுவதை 40 நாள்கள் வரை தள்ளி வைக்க வேண்டும். வறட்சிக் காலங்களில் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் இருந்து ராஜா வாய்க்காலில் கலக்கும் சாக்கடை கழிவு நீரை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதால் நோய்த் தொற்று ஏற்படும் சூழ்நிலையும், பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது.
எனவே, சாக்கடை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வாய்க்காலில் விடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.
கூட்டத்தில், பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்குமணி, பரமத்தி வேலூர் பொதுப்பணித் துறை இளம்பொறியாளர் வினோத்குமார் மற்றும் ராஜா, குமாரபாளையம், பொய்யேரி, மோகனூர் வாய்க்கால்களின் பாசன விவசாயிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...