மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ.1.32 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 287 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இந்த மனுக்களைப் பெற்று கொண்ட அவர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.1,32,054 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் எம்.துரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எம்.கண்ணன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கே.சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







