இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை இடமாற்றம் செய்யக் கோரியும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் இருந்து நகராட்சிப் பள்ளிகளுக்கு வழங்கிய சட்ட விரோத பணியிட நிரவல், இடமாறுதல் மற்றும் மனமொத்த மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்தும், அவரை இடமாறுதல் செய்ய வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினர்.
ஒன்றியச் செயலர் ஜெயகுமார், மாநில தீர்ப்புக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், விதிமுறைக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்டச் செயலர் முருக செல்வராசன், மாநில தலைமை நிலையச் செயலர் பழனிசாமி, மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் பாலமுரளி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ஹரிகரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









