ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: குண்டத்தில் இறங்கி  பக்தர்கள் நேர்த்திக்கடன் 

குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனைச் செலுத்தினர். 

News image
Updated On :1 மார்ச் 2018, 1:34 am

DIN

குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனைச் செலுத்தினர். 
இக்கோயில் திருவிழா கடந்த 13-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு காவிரி ஆற்றிலிருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  தொடர்ந்து, கோயிலுக்கு முன்பாக குண்டம் கண் திறக்கப்பட்டு,  பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் அடுக்கப்பட்டன. 
சிறப்பு பூஜைகளுடன் குண்டத்தில் தீ மூட்டப்பட்டு புதன்கிழமை அதிகாலையில் தீப்பிழம்புகள் சமன் செய்யப்பட்டன. 
முதலில் பூசாரி குண்டத்தில் இறங்கியதைத் தொடர்ந்து, விரதமிருந்த ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.  பக்தர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
குமாரபாளையம் காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து, கோயில் முன்பாக ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.  இக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.
திருவிழா ஆலோசனைக் குழுத் தலைவர் வி.வாசுதேவன், குமாரபாளையம் நகர அதிமுக செயலர் ஏ.கே.நாகராஜன், முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன்,  நம்ம குமாரபாளையம் அமைப்பின் தலைமை தன்னார்வலர் எஸ்.ஓம்சரவணா மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.