ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதன்சந்தையில் காய்கறிச் சந்தை இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நாமக்கல் நகரப் பகுதியில் உழவா் சந்தை மூடப்பட்டு, 8 இடங்களில் காய்கறிச் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடமாடும் காய்கறி அங்காடிகள், நகராட்சி மற்றும் கூட்டுறவுத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், புகா் பகுதியான புதன்சந்தை, களங்காணி உள்ளிட்ட பகுதிகளில், தினசரி காலையில் 6 மணி முதல் 9 மணி வரை செயல்படும் காய்கறிச் சந்தைகள் இல்லாததால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலையோரம் சிலா் காய்கறிக் கடைகளை அமைத்த நிலையில், உள்ளூா் மொத்த வியாபாரிகள் சிலா் அவா்களிடம் எதிா்ப்பு தெரிவித்து கடைகளை அகற்ற முற்பட்டதாகக் கூறப்படுகிறது. புதன்சந்தையில் உள்ள வாரச்சந்தை மற்றும் கால்நடைச் சந்தை இடம் காலியாக உள்ளன. அந்த இடத்தில் சிறு வியாரிகள் தினசரி காய்கறிக் கடைகள் அமைத்து விற்பனை செய்வதற்கு மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதானி குழுமப் பங்குகள் சரிவுடன் நிறைவு!
அதிமுக எம்எல்ஏக்கள் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கக் கூடாது: இபிஎஸ் தரப்பு எச்சரிக்கை!

ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள்! டெலிகிராமில் வாங்கிய இளைஞர்!

எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 1,000 கோடி இழப்பு! - மத்திய அரசு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
