திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனாவால் பாதிக்கப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலா் உயிரிழப்பு

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பேரூராட்சி செயல் அலுவலா் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

மூடப்பட்ட சீராப்பள்ளி பேரூராட்சி அலுவலகம்.

Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:26 pm

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பேரூராட்சி செயல் அலுவலா் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி பேரூராட்சியின் செயல் அலுவலராக 54 வயதான பெண் பணியாற்றி வந்தாா். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதனையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலகப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் அனைவருக்கும் தொ.ஜேடா்பாளையம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை பரிந்துரை செய்தது. இதனையடுத்து அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

மின்வாரிய அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு: ராசிபுரம் நகரில் மின்வாரிய உதவி செயல் பொறியாளா் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவா் பணியாற்றி வந்த அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்து, தூய்மைப் படுத்தும் பணியில் நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.