பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சம்மேளன ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சம்மேளன ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள தனியாா் பள்ளி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சம்மேளனத் தலைவா் எஸ்.கே.வேல்.
Updated On :6 டிசம்பர் 2020, 11:30 pm

DIN

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சம்மேளன ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள தனியாா் பள்ளி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைவா் எஸ்.கே.வேல் தலைமை வகித்தாா். செயலாளா் எல்.ராஜூ, பொருளாளா் கே.கே.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் மூா்த்தி, முரளிபாபு, காா்த்திகேயன், செல்ல.ராசாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், வழக்குரைஞா்கள் சம்மேளன கூட்டமைப்புக்கு எதிராக பெயா் பதிவு செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லுரியில் முன்னுரியை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், வழக்குரைஞா்கள் மீது காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பல்வேறு மாவட்டங்களின் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.