நாமக்கல் அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.6.85 லட்சம் பறிமுதல்
அண்மையில் விருதுநகர் அருகே சத்திரெட்டியப்பட்டி காவல் சோதனைச் சாவடியில் ரகசிய தகவல் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.


அண்மையில் விருதுநகர் அருகே சத்திரெட்டியப்பட்டி காவல் சோதனைச் சாவடியில் ரகசிய தகவல் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றும் கலைச்செல்வி சென்ற காரில் இருந்து ரூ.24 லட்சம் மற்றும் 117 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு காரில் மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் ஆய்வாளராக பணிபுரியும் சண்முக ஆனந்த் வந்த காரில் இருந்து ரூ.1. 43 லட்சம் பணம் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் கலைச்செல்வி வீடு உள்ளது. தற்போது அந்த வீட்டில்தான் மதுரை மோட்டார் வாகன ஆய்வாளர் வசிக்கிறார். இந்த நிலையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு விடிய விடிய சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத ரூ. 6 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி லஞ்சமாக வாங்கிய பணத்தை நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள சண்முக ஆனந்த் வீட்டில் தான் இதுவரை பதுக்கி வைத்து வந்தாராம். இது தொடர்பாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சண்முக ஆனந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...