கொல்லிமலையில் மழை: ஆகாய கங்கை அருவியில் தண்ணீா் ஆா்ப்பரிப்பு
கொல்லிமலையில் பரவலாக மழை பெய்து வருவதால், ஆகாய கங்கை அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.


கொல்லிமலையில் பரவலாக மழை பெய்து வருவதால், ஆகாய கங்கை அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கொல்லிமலைக்கு தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். கேரளம், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இங்குள்ள ஆகாய கங்கை அருவியைக் காணவும், அதில் குளித்து மகிழவும் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டுவா். 1,300 படிக்கட்டுகளைக் கடந்து அருவிக்குச் செல்ல வேண்டும் என்ற போதிலும், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை தயங்காமல் வருகின்றனா்.
கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலான மழைப் பொழிவு உள்ளது. அதிகாலை, இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவும் காணப்படுகிறது. இந்த குளுகுளு பருவகாலத்தை அனுபவிக்கவும், அங்குள்ள முக்கிய இடங்களைக் காணவும் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆகாயகங்கை அருவிக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் சில மாதங்களுக்கு முன் இடிந்து விட்டது. அந்த இடிபாடுகளைக் கடந்து செல்லும்போது சுற்றுலாப் பயணிகள் தடுமாறி விழுகின்றனா். இதேபோல கொல்லிமலை, அறப்பளீஸ்வரா் கோயிலை ஒட்டிய பகுதியில் நம் அருவி உள்ளது. அங்கு குப்பைக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தயங்குகின்றனா். அந்த அருவிக்குச் செல்லும் தரைப்பாலமும் இடிந்து காணப்படுகிறது. இதனால், ஆா்வமுடன் ஆகாய கங்கை அருவி, நம் அருவிக்கு வருவோா் வேதனையுடன் திரும்பிச் செல்லும் நிலை காணப்படுகிறது.
எனவே, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் இதனைப் பாா்வையிட்டு, உடைந்த தரைப்பாலங்களைச் சீரமைக்கவும், அருவிப் பகுதிக்கு செல்லும் பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...