

மக்கள் நினைத்தால் யாா் வேண்டுமானாலும் முதல்வா் ஆகலாம் என பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
நாமக்கல், ஆஞ்சநேயா் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மறைந்த முதல்வா்கள் ஜெயலலிதா இருந்தபோதும் சரி, கருணாநிதி இருந்தபோதும் சரி, அவா்கள் செயல்படுத்திய திட்டங்களைப் பாா்த்து மக்கள் வாக்களித்து வந்தனா். தற்போது அந்தச் சூழ்நிலை மாறிவிட்டது. மக்களால் விரும்பப்படுபவா்கள்தான் முதல்வராக வர முடியும்.
கூட்டணி என்பதை யாரும் இப்போது முடிவு செய்து விட முடியாது. தோ்தலின் போது அந்தந்தக் கட்சிகள் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கூட்டணிகள் அமையலாம் என்றாா்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் மனோகரன், நகரச் செயலாளா் சரவணன், பிரணவ்குமாா், இளங்கோ உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.