தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம்

தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயற்குழு கூட்டம், ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:20 pm

DIN

தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயற்குழு கூட்டம், ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் அ.ராஜேஷ் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் ச.காா்த்திகேயன் வரவேற்றாா். இக்கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி பணியாற்றுவது குறித்தும், வேட்பாளா்கள் தோ்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தோ்தலில் கட்சி சாா்பில் போட்டியிட நாமக்கல் தொகுதிக்குக் கட்சியின் மாநில அமைப்பாளா் கி.தமிழ்வாணன், ராசிபுரம் (தனி) தொகுதிக்குப் போட்டியிட கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் பெ.அருள்மொழிதேவன் ஆகியோரும் விருப்ப மனு வழங்கினா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கும் நிலையை மாற்றி குடிநீா் விரைந்து வழங்கிட வேண்டும். ராசிபுரம் நகராட்சிப் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் பழுதான கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில், நீண்ட காலமாக உள்ளது. இதனால் அங்கு கடை நடத்திவந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இப் பகுதியில் விரைந்து கடைகள் கட்டிமுடிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசிபுரம் நகரில் சந்துக்கடை என்ற பெயரில் இரவு பகலாக டாஸ்மாக் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதன்மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளா் இரா.முத்துசாமி, நகரத் தலைவா் க.ரகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.