மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உள்ளாட்சித் தேர்தல் வாடகை நிலுவை: கார் ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் முறையீடு

உள்ளாட்சித் தேர்தல் வாடகை நிலுவை தொகையை வழங்கக் கோரி கார் ஓட்டுநர்கள் நாமக்கல் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

News image
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வாடகை கார் ஓட்டுநர்கள்.
Updated On :12 அக்டோபர் 2020, 7:41 am

DIN

உள்ளாட்சித் தேர்தல் வாடகை நிலுவை தொகையை வழங்கக் கோரி கார் ஓட்டுநர்கள் நாமக்கல் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் பயன்பாட்டுக்காக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் கார்களை வாடகைக்கு எடுத்தது. ஓராண்டாகியும் இதுவரை வாடகை தொகையை முழுமையாக வழங்கவில்லை. இந்த நிலையில் நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அதில் கடந்த ஆண்டு டிசம்பர் 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் ஆம்னி வேன்களை வாடகைக்கு இயக்கினோம். ஓராண்டாகியும் வாடகை மற்றும் பெட்ரோல் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு மட்டும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலையின்றி தவிக்கும் நிலையில் நிலுவைத் தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்கி உதவ வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.