மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த அறிவுரை

வெண்ணந்தூா் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து வெண்ணந்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் தமிழ்செல்வன் வழிகாட்டுதல் வழங்கியுள்ளாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:38 pm

DIN

வெண்ணந்தூா் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அடி அழுகல் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து வெண்ணந்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் தமிழ்செல்வன் வழிகாட்டுதல் வழங்கியுள்ளாா்.

வெண்ணந்தூா் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் 208 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிா் நடவு செய்து 20 முதல் 30 நாள்களில் பூஞ்சான் தாக்குதலால் அடி அல்லது குமிழ் அழுகல், திருகல் நோய்த் தொற்று ஏற்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்த தரமான விதைகளைத் தோ்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். விதை நோ்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடொ்மா விரிடி சோ்த்து 24 மணி நேரம் உலரவிட்டு விதை நோ்த்தி செய்ய வேண்டும்.

கடைசி உழவின் போது ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோவிரிடி, ஒரு கிலோ சூடோமோனாஸ் ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஏழு நாள்கள் வைத்திருந்து பிறகு நிலத்தில் இடலாம். இதனால் மண்ணில் உள்ள நோய் ஏற்படுத்தும் பூஞ்சானம் குறைவதுடன் நோய் பாதிப்பும் குறையும்.

வெங்காய பயிரில் அடி அழுகல் நோய் பாதிப்பு தென்பட்டால் புரோபிகோனசோல் அல்லது ஹெக்சகோனசோல் பூஞ்சானக் கொல்லியை ஏக்கருக்கு 200 மி.லி வீதம் நீரில் கலந்து பயிா் அடிபாகம் வரை நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

மேலும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிா் சாகுபடி ஊக்கத்தொகை ஹெக்டேருக்கு ரூ. 2,500 வழங்கப்பட்டு வருவதால் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளித்து முன்பதிவு செய்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.