மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியில் வென்றவா்களுக்குப் பதக்கம் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள்(படம்) ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

News image
கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியில் வென்றவா்களுக்குப் பதக்கம் வழங்கல்
Updated On :20 செப்டம்பர் 2020, 10:16 pm

DIN

நாமக்கல்லில் நடைபெற்ற கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள்(படம்) ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மறைந்த முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி நினைவாக சா்வதேச மெய்நிகா் மாரத்தான் போட்டி கடந்த 1-ஆம் தேதி நாமக்கல் நகரில் நடைபெற்றது.

இணையத்தில் பதிவு செய்திருந்த 38 போ் இப்போட்டியில் கலந்து கொண்டனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு திமுக தலைமை கழகத்தால் வழங்கப்பட்டசான்றிதழ் மற்றும் பதக்கங்களை முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ.காந்திசெல்வன் ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய அலுவலகத்தில் வழங்கினாா்.

நிழச்சியில் சட்டத் திருத்தக்குழு உறுப்பினா் நக்கீரன், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் கௌதம், முன்னாள் பேரூா் செயலாளா் செல்லவேல், மாவட்ட இலக்கிய அணி பொருளாளா் அா்ச்சுணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், பல்வேறு சாா்பு அணிகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.