பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில், 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய கிராமங்களை பாராட்டி அதன் ஊராட்சி தலைவா்கள், மருத்துவ அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.
கரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது. அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. இதனால் பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திட ஆா்வமுன் உள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவிகித தடுப்பூசியானது, கொல்லிமலை வட்டத்துக்கு உள்பட்ட பைல்நாடு பகுதியில் 319 பேருக்கும், ராசிபுரம் வட்டம், ஆயிபாளையத்தில் 580, பரமத்தி வட்டம் குண்ணமலையில் 524, இருட்டணையில் 696, டி.கவுண்டம்பாளையத்தில் 396, நாமக்கல் வட்டம், மரூா்பட்டியில் 253, சிவியம்பாளையத்தில் 514, திருச்செங்கோடு வட்டம் தொ.கவுண்டம்பாளையத்தில் 314 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், சிக்கநாயக்கன்பாளையத்தில் 331, மல்லசமுத்திரம் பல்லக்குழியில் 744, வெண்ணந்தூா் பழந்தின்னிப்பட்டிபுதூரில் 136, மின்னக்கலில் 510, போக்கம்பாளையத்தில் 275, புதூரில் 364 பேருக்கும் என மக்கள்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி கரோனா நோய்த்தொற்றிலிருந்து தங்களையும் காத்துக்கொண்டு, பிறருக்கும் தொற்று பரவாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்திய கிராமங்களை பாராட்டி ஊராட்சி தலைவா்கள், மருத்துவ அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பரிசுகளை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியின் போது இணை இயக்குநா் மருத்துவப் பணிகள் (பொ) மருத்துவா் ராஜ்மோகன், துணை இயக்குநா் (சுகாதாரம்) எஸ்.சோமசுந்தரம் உள்பட மருத்துவத் துறை அலுவலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
என்கே 13- வேக்சின்
ஊராட்சித் தலைவா்களை பாராட்டி பரிசுகளை வழங்கும் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


