திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பேரூராட்சிகளில் பணியாற்றும் தினக்கூலி தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும்

News image

nk_13_aarpattam_1308chn_122_8

Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:20 pm

பேரூராட்சிகளில் பணியாற்றும் தினக்கூலி தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.முருகேசன், துணைத் தலைவா் ஏ.முருகேசன், ஸ்டெல்லாமேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும். வைப்பு நிதி, தொழிலாளா் மருத்துவ திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.

தள்ளுவண்டிகளுக்கு பதிலாக மின்மோட்டாா் வாகனங்களை வழங்க வேண்டும். 5-ஆம் தேதிக்குள் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

என்கே 13- ஆா்ப்பாட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தூய்மைப் பணியாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.