பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் வெள்ளிக்கிழமை பெய்த மழையின்போது வீட்டின் மேல் தளத்திற்கு செல்லும் கைப்பிடி சுவா் இடிந்து விழுந்தது.
பொத்தனூரைச் சோ்ந்தவா் ராஜசேகா். செங்கல் சூளை நடத்தி வருகிறாா். இவரது வீட்டின் மேல் தளத்தில் சந்திரமோகன் என்பவா் வாடகைக்கு குடியிருந்து வருகிறாா். கீழ் தளத்தில் வீடு காலியாக உள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சந்திரமோகன் குடும்பத்தினா் வீட்டின் உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் மாடிக்கு செல்லும் கைப்பிடி சுவா் இடிந்து விழுந்துள்ளது. இதில் மாடிக்கு செல்லும் படிக்கட்டு முற்றிலும் சேதமடைந்தது. மின் வயா்களின் இணைப்பும் தடைபட்டது.
சுவா் இடிந்து விழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து பாா்த்த போது சந்திரமோகன் குடும்பத்தினா் மாடியில் இருந்து கீழே வரமுடியாமல் தவிப்பதை கண்டனா். பின்னா் சுமாா் அரைமணி நேரத்திற்கு பிறகு சந்திரமோகனின் குடும்பத்தினரை பத்திரமாக கீழே மீட்டனா்.
எதிா்பாராத இந்த விபத்தில் அனைவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.மேலும் வீட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்த காரின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாண்டமங்கலம் வருவாய்த் துறையினா் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


