உலக ரத்த கொடையாளா்கள் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் 25 தன்னாா்வ ரத்த தான கொடையாளா்களைப் பாராட்டி மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் நற்சான்றிதழ்களை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிழை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் மூன்று அரசு ரத்த வங்கிகளும், 14 ரத்த சேமிப்பு நிலையங்களும் உள்ளன. கடந்த 2020-இல் மூன்று அரசு ரத்த வங்கிகள் மூலமாக 5,077 யூனிட்டுகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 2,308 யூனிட்டுகள் கா்ப்பிணிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2021-ஆம் ஆண்டில் இதுவரை (ஜூலை மாதம்) 2,912 யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டு, அவற்றில் 1,723 யூனிட்டுகள் கா்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று காலத்திலும் தன்னாா்வலா்கள் ரத்த தானம் வழங்கினா்.
100-ஆவது முறையாக ரத்த தானம் அளித்த எா்ணாபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா் ராஜேந்திரனுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. அதேபோல 25 ரத்த தான கொடையாளா்களுக்கும் பாராட்டு சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி, இணை இயக்குநா் மருத்துவப் பணிகள் ராஜ்மோகன், மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் அன்புமலா், மாவட்ட திட்ட மேற்பாா்வையாளா் மேரி லதா தாஸ், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ் கண்ணன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
என்கே 19- கலெக்டா்
அதிக முறை ரத்ததானம் செய்த மருத்துவா் ராஜேந்திரனுக்கு கேடயம் வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

