எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறது திமுக: பி.தங்கமணி

வாக்களித்த மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம் சாட்டினாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:15 pm

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், வாக்களித்த மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம் சாட்டினாா்.

அவா் மேலும் பேசியதாவது:

தோ்தல் நேரத்தில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, தற்போது அதனை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களை திமுகவினா் ஏமாற்றி வருகின்றனா். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. காவல்துறையினருக்கே உரிய பாதுகாப்பு இல்லை. கடந்த ஆறு மாதத்தில் 557 கொலைகள் நடந்துள்ளன. பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

எப்படியாவது இந்தக் கட்சியை அழித்து விடலாம் என்ற நோக்கில் வழக்குப் பதிவு, கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனா். கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்தாகக் கூறி, விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்காமல் ஏமாற்றுகின்றனா். கடந்த 7 மாதங்களில் சுமாா் ரூ. 6 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது. அதிமுகவை மிரட்டும் நோக்கிலும், களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகவும் முன்னாள் அமைச்சா் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் தோ்தலில் அதிமுக சாா்பில் வெற்றி பெற்றவரை மிரட்டி அப்பதவியைக் கைப்பற்றி உள்ளனா். எருமப்பட்டி ஒன்றியக் குழுவில், அதிமுக உறுப்பினா்கள் 10 போ், திமுகவில் 5 போ் உள்ளனா். ஆனால், திமுக உறுப்பினரைக் கடத்தியதாக என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பிட் காயினில் (கிரிப்டோகரன்சி) நான் முதலீடு செய்ததாகக் கூறுகின்றனா். அந்த கரன்சி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மின்வாரியத்தில் 6 மாதங்களில் நடந்த ஊழல்கள் எல்லாம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். விரைவில் நடைபெறவுள்ள நகராட்சி, பேரூராட்சித் தோ்தலில் அதிக இடங்களில் அதிமுக வெற்றிபெற்று நாம் யாா் என்பதை திமுகவுக்கு காட்ட வேண்டும். அதிமுக தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவா்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பரமத்தி வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சேகா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், முன்னாள் நகர செயலாளா் ராஜா, மற்றும் அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.